Posts Tagged ‘The Vanishing (1988)’

உலகசினிமா மாதக்குறிப்பு : ஜுலை

    கடந்த மாதம் ஒரு சில நல்ல உலகத் திரைப்படங்களைக் காண வாய்ப்புக் கிட்டியது.பல நாட்களாகப் பார்க்க நினைத்தத் திரைப்படங்கள் உட்பட எதிர்ப்பாராமல்  பார்த்தப் படங்கள் என நிறையவே மனதினைக் கொள்ளைக்கொண்டன.இதன் விபரங்கள் இப்பதிவில்….

 

  1) FILM : IAM NOT SCARED

      YEAR : 2003

      COUNTRY : ITALY

      DIRECTOR :

      STARING : 

    இதுவரை நான் பார்த்த மிகச் சிறந்த இத்தாலி நாட்டு திரைப்படங்களில் ஒன்றாகவே இதனைக் கூற விரும்புகிறேன்.சிறுவர்களுடன் குடும்பத்துடன் கண்டிப்பாக அமர்ந்து பார்க்க வேண்டிய இத்தாலியத் திரைப்படம் ஐயம் நொட் ஸ்கேர்ட். 

  

2) FILM : THE VANISHING

     YEAR : 1988

     COUNTRY : NETHERLANDS

     DIRECTOR :

     STARING :

  இது ஒரு நெதெர்லண்ட் (Netherlands) நாட்டு டத்ச் (Dutch) மொழித் திரைப்படம்.சந்தேகம் ஏதும் இல்லாமல்  சினிமா வரலாற்றில் மிகச் சிறந்தப் படங்களில் ஒன்று என்றே சொல்லவேண்டும்.செவென் (Seven – 1994) பார்த்தத் தாக்கத்தில் விகி (Wiki) – யை அனுகியபொழுது அங்கு இருந்த ஒரு வரியை பார்த்து/படித்து அசந்து போனேன்.

 இதோ அந்த வரி உங்களுக்காக : John Wrathall wrote, “Seven has the scariest ending since George Sluizer‘s original The Vanishing

 அதனைக் கண்டவுடன் அறிமுகம் ஆனதுதான் இந்தப் படம்.டைட்டிலை பார்த்தவுடன் எனக்கு சட்டென்று உடனே ஞாபகத்துக்கு வந்தது ஹிட்ச்காக்கின் The Lady Vanishes (1938) – தான்.ஒருவேளை Vanish என்ற வார்த்தையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

   

3) FILM : THE BUCKET’S LIST

     YEAR : 2007

     COUNTRY : AMERICA

     DIRECTOR : BOB REINER

     STARING : JACK NICHOLSON,MORGAN FREEMAN

  இந்த மாதத்தில் நான் பார்த்த ஹாலிவுட் படங்களில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு படம் என்றால் அது தெ பக்கேட் லிஸ்ட் ஆகும்.ஜேக் நிக்கல்சன் (Jack Nicholson) மற்றும் மோர்கன் பிரீமனும் (Morgan Freeman) இணைந்து நடித்த இப்படம் 2007 ஆம் ஆண்டு போப் ரைனர் (Bob Reiner) இயக்கத்தில் வெளிவந்தது.பொதுவாக இவ்விரண்டு நடிகர்களில் ஒருவர் நடித்தாலே மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டும் என்று நினைக்கும் நண்பர்களுக்கு இந்தப் படம் ஒரு விருந்து எனலாம்.கண்டிப்பாக நடிப்புக்கு பஞ்சம் இல்லாமல் நிக்கல்சனும் பிரீமனும் நடிப்பில் அசத்தியும் படத்தில் மரணத்தை எதிர்நோக்கும் வயதான இரு புற்றுநோயாளிகளாக வாழ்ந்தே இருப்பார்கள்.படத்தில் குறிப்பிடத்தக்க இன்னொரு நபர் படத்தின் இயக்குனரான போப் ரையினர்.இவர் எடுத்த “மிசெரி” (Misery) திரைப்படம் பலருக்கு பிரசித்தம் எனலாம்.என்னவோ ஏதோ இவரைப் போன்ற சில இயக்குனர்களுக்கு பல நேரங்களில் பேரும் புகளும் ஏன் விருதுகளும் கூடக் கிட்டுவதில்லை.பல நல்ல இயக்குனர்களுக்கு விருதுகள் கிடைக்காதது (ஆஸ்கர்,கோல்டன் குளோப் என்று பல) வழக்கம்தானே.எனினும்,சிறுவர்கள் வயதானவர்கள் என்று பாராமல் சிறந்த நடிப்புக்காகவும் இயக்கத்திற்காகவும் பல அர்த்தமுள்ளக் கருத்துகளுக்காகவும் பார்த்து முடிக்கும் பொழுது கிடைக்கும் சில இனிமையான உணர்வுகளுக்காகவும் அனைவரும் பார்க்க வேண்டிய ஹாலிவுட்டின் பிஜி 13 திரைப்படம் இந்த தெ பக்கேட் லிஸ்ட் ஆகும்.      

 4) FILM : DIE HARD

     YEAR : 1988

     COUNTRY : AMERICA

     DIRECTOR : JOHN MACTIERNEN

     STARING : BRUCE WILLIS

     இந்த ஹாலிவுட் அதிரடி திரைப்படத்திற்கு அறிமுகம் எதுவும் தேவையில்லை என்று நினைக்கிறேன்.புரூஸ் வில்லிஸ் நடிப்பில் 1989 – ஆம் ஆண்டு வெளிந்து மிகச் சிறந்த வரவேற்ப்பைப் பெற்றதோடு வசூலையும் வாரி குவித்தது என்று சொல்லலாம்.இப்படத்தின் இயக்குனரைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் நமக்கு எல்லோருக்கும் அறிமுகமான “பிரேடேதர்” (Predator – 1987) படத்தின் இயக்குனரான “ஜோன் மெக்த்தியர்னன்” (John Mactiernen) – ஆகும்.சமீபகாலமாக இவரிடமிருந்து படங்கள் வராவிட்டாலும்,சற்று பல ஆண்டுகளுக்கு முன்புச் சென்றால் இவர் இயக்கிய “நொமாட்” (Nomad), “பிரேடேதர்” (Predator) போன்ற ஒரு சில நல்ல திரில்லர் கலந்த ஆக்சன் படங்கள் கிடைக்கும் என்பதை (பழைய புதிய திரைப்பட Action விரும்பிகளுக்கு) சொல்லிக்கொள்கிறேன்.பிறகு டை ஹார்ட்டை பற்றி கூறவேண்டும் என்றால் முதலிலும் மிக முக்கியமானவர் படத்தின் ஹீரோவான புரூஸ் வில்ஸ்.புகழ்பெற்ற ஹீரோக்களான அர்னால்ட் மற்றும் சிலிவெஸ்டர் ஸ்டால்லேன் போன்றவர்களுக்கு டெர்மினட்டர்,ரேம்போ போன்ற Sequels போல இவருக்கு டை ஹார்ட் Sequels ஆகும்.

இதுவரை இந்த Sequels – சில் சுமார் நான்கு படங்கள் வெளிவந்துள்ளன (நான் பார்த்தது இது ஒருதான்).Action விரும்பிகள் கண்டிப்பாக இதனைத் தவறவிடக்கூடாது.பல ஹாலிவுட் படங்களுக்கு (இந்திய சினிமாவிலும்தான்) ஒரு பாதிப்பாகவும் இன்ஸ்பிரேஷன் ஆகவும் இப்பொழுதும் விளங்கும் இப்படத்தில் புரூஸ் விலிஸ் தீவிரவாதிகளிடம் இருந்து அப்பாவி மக்களை காப்பாற்றும் போலிஸ் அதிகாரியாக John McClane என்ற கதாபாத்திரத்தில் நடித்து பின்னிப்பெடல் எடுத்திருப்பார்.எனவே கண்டிப்பாக எல்லா அதிரடி பட விரும்பிகளும் பார்க்க வேண்டியப்படம் டை ஹார்ட்.

5) FILM : KAATHALIKKA NERAMILLAI

     YEAR : 1964

     COUNTRY : INDIA

     DIRECTOR : CV.SRIDHAR

     STARING : MUTHURAMAN,MALAYSIA RAVICHANDRAN,KANCHANA

     (சென்ற மாதத்தில் ஏறக்குறை முழுமையாகப் பார்த்தத் தமிழ் திரைப்படங்களில் ஒன்று என்றால் அது இதுதாங்க.)           கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்ச் சினிமாவைவிட்டு மறைந்த நடிகரான மலேசிய ரவிச்சந்திரன் அவர்களின் நினைவில் பார்த்தப்படம்.தமிழ்ச் சினிமாவின் இயல்பான நல்ல நடிகர்களில் ஒருவரான மலேசிய ரவிச்சந்திரன் அவர்கள் நடித்த பல படங்களை முன்னமே பார்த்திருந்தாலும்,அவரது நினைவாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட காதலிக்க நேரமில்லை திரைப்படத்தை ஐந்து அல்லது ஆறாவது முறையாகக் கண்டு ரசித்தேன்.1964 – ஆம் ஆண்டு புதுமை இயக்குனர் சிவி.ஸ்ரீதரின் கைவண்ணத்தில் வெளிவந்த இத்திரைப்படம் இன்றளவும் மனதுக்கு சலிப்பு தட்டாத காட்சி மற்றும் வசனங்களோடும் பல இனிமையான பாடல்களோடும் புதுமை மற்றும் புத்திசாலித்தனமும் நிறைந்த இயக்கத்தோடும் இன்றும் மனதை கொள்ளைக்கொள்கிறது.பொதுவாக (நான் பார்த்தவரையில்) இயக்குனர் ஸ்ரீதர் அவர்களின் திரைப்படங்களில் நடிகர்களின் பங்களிப்பு எப்பொழுதுமே அபாரமாக இருக்கும்.அதுவும் நடிகர் ஜெமினி கணேசன் அவர்கள் நடிப்பில் வெளிவந்த சுமைத்தாங்கி படத்தை உதாரமாகச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.ஒருமுறைதான் பார்த்திருந்தாலும் ஸ்ரீதர் அவர்களின் படங்களில் சுமைத்தாங்கி எனக்கு மிகவும் பிடித்தப்படமும் மட்டுமன்றி பலராலும் Underated செய்யப்பட்ட படமும் கூட (அவர் இயக்கியதில் பலதும் அப்படிதான்…என்னைப் பொறுத்தவரையில்).எனவே நடிப்பை பொறுத்தவரையில் இப்படத்தில் நாகேஸ்,ரவிச்சந்திரன்,முத்துராமன்,காஜ்சனா போன்ற நடிகர்களின் பங்கு அருமையானதாகும்.

  எளிதான கதை,சிறந்த திரைக்கதை,திரைக்கதையோடு கலந்த அல்லது ஒட்டிய வசனங்கள்,ஒளிப்பதிவு,நடிப்பு,இயக்கம் மற்றும் மெல்லிசை மன்னரின் மெல்லிய இசை என்று பலவும் ஒருசேர காதலிக்க நேரமில்லை திரைப்படம் சற்று உயந்த இடத்தில் நிமிர்ந்து நிற்பதோடு இன்றளவும் தமிழ்சினிமாவின் நகைச்சுவையுலகில் புதுமையாகவே தெரிகிறது.எனவே,எத்தனை முறைப் பார்த்திருந்தாலும் நேரம் இருக்கும் பொழுது கண்டிப்பாக இன்னொரு முறையும் பார்க்கலாம்.   

  

சற்றுப் பொறுங்கள்…ஜூலை மாதக்குறிப்பு இதனோடு நின்றுவிடவில்லை.கடந்த மாதத்தில் பல திரைப்படங்களைப் பார்த்திருந்தாலும் இங்கு சிலவற்றையே எழுத முடிந்தது.எனவே,இன்னும் சில படங்களை நீண்ட பதிவுகளாக எழுதலாம் என்ற நினைப்போடு இப்பொழுது இந்தப் பதிவை முடித்துக்கொள்கிறேன்.இனிவரும் காலங்களில் நிறைய திரைப்படங்களைப் பற்றி எழுத முயற்சிசெய்கிறேன்.

 

குறிப்பு : இந்த பதிவில் குறிப்பட்ட சில திரைப்படங்கள்,நான் கடந்த மாதத்தில் பார்த்ததிலேயே சிறந்த மற்றும் ஒருமுறையேனும் கண்டிப்பாகப் பார்க்கவேண்டியப் படங்களே.

பிழைகள் ஏதாவது கண்ணில் தென்பட்டால் மன்னிக்கவும்.திருத்திக்கொள்ள முயச்சி செய்கிறேன்.மீண்டும் அடுத்தப் பதிவில் சந்திக்கலாம்.அதுவரை உங்களது ஆதரவிற்க்கு நன்றி.வணக்கம்.

Advertisements