உலகசினிமா மாதக்குறிப்பு : ஜுலை

    கடந்த மாதம் ஒரு சில நல்ல உலகத் திரைப்படங்களைக் காண வாய்ப்புக் கிட்டியது.பல நாட்களாகப் பார்க்க நினைத்தத் திரைப்படங்கள் உட்பட எதிர்ப்பாராமல்  பார்த்தப் படங்கள் என நிறையவே மனதினைக் கொள்ளைக்கொண்டன.இதன் விபரங்கள் இப்பதிவில்….

 

  1) FILM : IAM NOT SCARED

      YEAR : 2003

      COUNTRY : ITALY

      DIRECTOR :

      STARING : 

    இதுவரை நான் பார்த்த மிகச் சிறந்த இத்தாலி நாட்டு திரைப்படங்களில் ஒன்றாகவே இதனைக் கூற விரும்புகிறேன்.சிறுவர்களுடன் குடும்பத்துடன் கண்டிப்பாக அமர்ந்து பார்க்க வேண்டிய இத்தாலியத் திரைப்படம் ஐயம் நொட் ஸ்கேர்ட். 

  

2) FILM : THE VANISHING

     YEAR : 1988

     COUNTRY : NETHERLANDS

     DIRECTOR :

     STARING :

  இது ஒரு நெதெர்லண்ட் (Netherlands) நாட்டு டத்ச் (Dutch) மொழித் திரைப்படம்.சந்தேகம் ஏதும் இல்லாமல்  சினிமா வரலாற்றில் மிகச் சிறந்தப் படங்களில் ஒன்று என்றே சொல்லவேண்டும்.செவென் (Seven – 1994) பார்த்தத் தாக்கத்தில் விகி (Wiki) – யை அனுகியபொழுது அங்கு இருந்த ஒரு வரியை பார்த்து/படித்து அசந்து போனேன்.

 இதோ அந்த வரி உங்களுக்காக : John Wrathall wrote, “Seven has the scariest ending since George Sluizer‘s original The Vanishing

 அதனைக் கண்டவுடன் அறிமுகம் ஆனதுதான் இந்தப் படம்.டைட்டிலை பார்த்தவுடன் எனக்கு சட்டென்று உடனே ஞாபகத்துக்கு வந்தது ஹிட்ச்காக்கின் The Lady Vanishes (1938) – தான்.ஒருவேளை Vanish என்ற வார்த்தையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

   

3) FILM : THE BUCKET’S LIST

     YEAR : 2007

     COUNTRY : AMERICA

     DIRECTOR : BOB REINER

     STARING : JACK NICHOLSON,MORGAN FREEMAN

  இந்த மாதத்தில் நான் பார்த்த ஹாலிவுட் படங்களில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு படம் என்றால் அது தெ பக்கேட் லிஸ்ட் ஆகும்.ஜேக் நிக்கல்சன் (Jack Nicholson) மற்றும் மோர்கன் பிரீமனும் (Morgan Freeman) இணைந்து நடித்த இப்படம் 2007 ஆம் ஆண்டு போப் ரைனர் (Bob Reiner) இயக்கத்தில் வெளிவந்தது.பொதுவாக இவ்விரண்டு நடிகர்களில் ஒருவர் நடித்தாலே மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டும் என்று நினைக்கும் நண்பர்களுக்கு இந்தப் படம் ஒரு விருந்து எனலாம்.கண்டிப்பாக நடிப்புக்கு பஞ்சம் இல்லாமல் நிக்கல்சனும் பிரீமனும் நடிப்பில் அசத்தியும் படத்தில் மரணத்தை எதிர்நோக்கும் வயதான இரு புற்றுநோயாளிகளாக வாழ்ந்தே இருப்பார்கள்.படத்தில் குறிப்பிடத்தக்க இன்னொரு நபர் படத்தின் இயக்குனரான போப் ரையினர்.இவர் எடுத்த “மிசெரி” (Misery) திரைப்படம் பலருக்கு பிரசித்தம் எனலாம்.என்னவோ ஏதோ இவரைப் போன்ற சில இயக்குனர்களுக்கு பல நேரங்களில் பேரும் புகளும் ஏன் விருதுகளும் கூடக் கிட்டுவதில்லை.பல நல்ல இயக்குனர்களுக்கு விருதுகள் கிடைக்காதது (ஆஸ்கர்,கோல்டன் குளோப் என்று பல) வழக்கம்தானே.எனினும்,சிறுவர்கள் வயதானவர்கள் என்று பாராமல் சிறந்த நடிப்புக்காகவும் இயக்கத்திற்காகவும் பல அர்த்தமுள்ளக் கருத்துகளுக்காகவும் பார்த்து முடிக்கும் பொழுது கிடைக்கும் சில இனிமையான உணர்வுகளுக்காகவும் அனைவரும் பார்க்க வேண்டிய ஹாலிவுட்டின் பிஜி 13 திரைப்படம் இந்த தெ பக்கேட் லிஸ்ட் ஆகும்.      

 4) FILM : DIE HARD

     YEAR : 1988

     COUNTRY : AMERICA

     DIRECTOR : JOHN MACTIERNEN

     STARING : BRUCE WILLIS

     இந்த ஹாலிவுட் அதிரடி திரைப்படத்திற்கு அறிமுகம் எதுவும் தேவையில்லை என்று நினைக்கிறேன்.புரூஸ் வில்லிஸ் நடிப்பில் 1989 – ஆம் ஆண்டு வெளிந்து மிகச் சிறந்த வரவேற்ப்பைப் பெற்றதோடு வசூலையும் வாரி குவித்தது என்று சொல்லலாம்.இப்படத்தின் இயக்குனரைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் நமக்கு எல்லோருக்கும் அறிமுகமான “பிரேடேதர்” (Predator – 1987) படத்தின் இயக்குனரான “ஜோன் மெக்த்தியர்னன்” (John Mactiernen) – ஆகும்.சமீபகாலமாக இவரிடமிருந்து படங்கள் வராவிட்டாலும்,சற்று பல ஆண்டுகளுக்கு முன்புச் சென்றால் இவர் இயக்கிய “நொமாட்” (Nomad), “பிரேடேதர்” (Predator) போன்ற ஒரு சில நல்ல திரில்லர் கலந்த ஆக்சன் படங்கள் கிடைக்கும் என்பதை (பழைய புதிய திரைப்பட Action விரும்பிகளுக்கு) சொல்லிக்கொள்கிறேன்.பிறகு டை ஹார்ட்டை பற்றி கூறவேண்டும் என்றால் முதலிலும் மிக முக்கியமானவர் படத்தின் ஹீரோவான புரூஸ் வில்ஸ்.புகழ்பெற்ற ஹீரோக்களான அர்னால்ட் மற்றும் சிலிவெஸ்டர் ஸ்டால்லேன் போன்றவர்களுக்கு டெர்மினட்டர்,ரேம்போ போன்ற Sequels போல இவருக்கு டை ஹார்ட் Sequels ஆகும்.

இதுவரை இந்த Sequels – சில் சுமார் நான்கு படங்கள் வெளிவந்துள்ளன (நான் பார்த்தது இது ஒருதான்).Action விரும்பிகள் கண்டிப்பாக இதனைத் தவறவிடக்கூடாது.பல ஹாலிவுட் படங்களுக்கு (இந்திய சினிமாவிலும்தான்) ஒரு பாதிப்பாகவும் இன்ஸ்பிரேஷன் ஆகவும் இப்பொழுதும் விளங்கும் இப்படத்தில் புரூஸ் விலிஸ் தீவிரவாதிகளிடம் இருந்து அப்பாவி மக்களை காப்பாற்றும் போலிஸ் அதிகாரியாக John McClane என்ற கதாபாத்திரத்தில் நடித்து பின்னிப்பெடல் எடுத்திருப்பார்.எனவே கண்டிப்பாக எல்லா அதிரடி பட விரும்பிகளும் பார்க்க வேண்டியப்படம் டை ஹார்ட்.

5) FILM : KAATHALIKKA NERAMILLAI

     YEAR : 1964

     COUNTRY : INDIA

     DIRECTOR : CV.SRIDHAR

     STARING : MUTHURAMAN,MALAYSIA RAVICHANDRAN,KANCHANA

     (சென்ற மாதத்தில் ஏறக்குறை முழுமையாகப் பார்த்தத் தமிழ் திரைப்படங்களில் ஒன்று என்றால் அது இதுதாங்க.)           கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்ச் சினிமாவைவிட்டு மறைந்த நடிகரான மலேசிய ரவிச்சந்திரன் அவர்களின் நினைவில் பார்த்தப்படம்.தமிழ்ச் சினிமாவின் இயல்பான நல்ல நடிகர்களில் ஒருவரான மலேசிய ரவிச்சந்திரன் அவர்கள் நடித்த பல படங்களை முன்னமே பார்த்திருந்தாலும்,அவரது நினைவாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட காதலிக்க நேரமில்லை திரைப்படத்தை ஐந்து அல்லது ஆறாவது முறையாகக் கண்டு ரசித்தேன்.1964 – ஆம் ஆண்டு புதுமை இயக்குனர் சிவி.ஸ்ரீதரின் கைவண்ணத்தில் வெளிவந்த இத்திரைப்படம் இன்றளவும் மனதுக்கு சலிப்பு தட்டாத காட்சி மற்றும் வசனங்களோடும் பல இனிமையான பாடல்களோடும் புதுமை மற்றும் புத்திசாலித்தனமும் நிறைந்த இயக்கத்தோடும் இன்றும் மனதை கொள்ளைக்கொள்கிறது.பொதுவாக (நான் பார்த்தவரையில்) இயக்குனர் ஸ்ரீதர் அவர்களின் திரைப்படங்களில் நடிகர்களின் பங்களிப்பு எப்பொழுதுமே அபாரமாக இருக்கும்.அதுவும் நடிகர் ஜெமினி கணேசன் அவர்கள் நடிப்பில் வெளிவந்த சுமைத்தாங்கி படத்தை உதாரமாகச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.ஒருமுறைதான் பார்த்திருந்தாலும் ஸ்ரீதர் அவர்களின் படங்களில் சுமைத்தாங்கி எனக்கு மிகவும் பிடித்தப்படமும் மட்டுமன்றி பலராலும் Underated செய்யப்பட்ட படமும் கூட (அவர் இயக்கியதில் பலதும் அப்படிதான்…என்னைப் பொறுத்தவரையில்).எனவே நடிப்பை பொறுத்தவரையில் இப்படத்தில் நாகேஸ்,ரவிச்சந்திரன்,முத்துராமன்,காஜ்சனா போன்ற நடிகர்களின் பங்கு அருமையானதாகும்.

  எளிதான கதை,சிறந்த திரைக்கதை,திரைக்கதையோடு கலந்த அல்லது ஒட்டிய வசனங்கள்,ஒளிப்பதிவு,நடிப்பு,இயக்கம் மற்றும் மெல்லிசை மன்னரின் மெல்லிய இசை என்று பலவும் ஒருசேர காதலிக்க நேரமில்லை திரைப்படம் சற்று உயந்த இடத்தில் நிமிர்ந்து நிற்பதோடு இன்றளவும் தமிழ்சினிமாவின் நகைச்சுவையுலகில் புதுமையாகவே தெரிகிறது.எனவே,எத்தனை முறைப் பார்த்திருந்தாலும் நேரம் இருக்கும் பொழுது கண்டிப்பாக இன்னொரு முறையும் பார்க்கலாம்.   

  

சற்றுப் பொறுங்கள்…ஜூலை மாதக்குறிப்பு இதனோடு நின்றுவிடவில்லை.கடந்த மாதத்தில் பல திரைப்படங்களைப் பார்த்திருந்தாலும் இங்கு சிலவற்றையே எழுத முடிந்தது.எனவே,இன்னும் சில படங்களை நீண்ட பதிவுகளாக எழுதலாம் என்ற நினைப்போடு இப்பொழுது இந்தப் பதிவை முடித்துக்கொள்கிறேன்.இனிவரும் காலங்களில் நிறைய திரைப்படங்களைப் பற்றி எழுத முயற்சிசெய்கிறேன்.

 

குறிப்பு : இந்த பதிவில் குறிப்பட்ட சில திரைப்படங்கள்,நான் கடந்த மாதத்தில் பார்த்ததிலேயே சிறந்த மற்றும் ஒருமுறையேனும் கண்டிப்பாகப் பார்க்கவேண்டியப் படங்களே.

பிழைகள் ஏதாவது கண்ணில் தென்பட்டால் மன்னிக்கவும்.திருத்திக்கொள்ள முயச்சி செய்கிறேன்.மீண்டும் அடுத்தப் பதிவில் சந்திக்கலாம்.அதுவரை உங்களது ஆதரவிற்க்கு நன்றி.வணக்கம்.

Advertisements

The Exorcist என்ற பேயோட்டுபவர்

                                                      (படங்களை பெரிதாக பார்க்க படங்களை கிளிக் செய்யவும்)

நான் பெரும்பாலும் ஹாரர் அல்லது திகில் திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பவன் கிடையாது.பெரும்பான்மையான ஹாரர் சினிமாக்களில் வழிந்தோடும் வன்முறைக் காட்சிகளும் அதற்கு ஒரு காரணம் எனலாம்.ஆனாலும் பிளாக் எழுத ஆரம்பித்ததுமே ஏதாவது நல்ல ஹாரர் திரைப்படங்களைப் பற்றி எழுத வேண்டும் என்று எண்ணிருந்தேன்.இருந்தாலும் எதுவுமே சரியாக அமையவில்லை.இருப்பினும்,நான் பார்த்ததிலேயே மிகச் சிறந்த உலக ஹாரர் சினிமாக்களைப் பற்றிய விமர்சனங்களை தொடர்ச்சியாக எழுதலாம் என்ற நினைப்போடு,இந்தப் பதிவை ஆரம்பிக்கிறேன்.

     நீங்கள் ஹாரர் திரைப்படங்களை தொடர்ந்துப் பார்த்து வரும் ரசிகரா?அப்படி என்றால் மேற்க்கொண்டு யோசிக்கத் தேவையில்லை உடனே டவுன்லோட்டுக்குப் போடுங்கள்.பதிவிரக்கம் செய்வதற்கு கீழே உள்ள லிங்க்கை பயன்படுத்தலாம்.

 For Download/பதிவிரக்கதிற்கு : http://worldoffreemovies-kumaran.blogspot.com/

    சுமார் எத்தனை ஹாரர் திரைப்படங்களை நீங்கள் பார்த்திறுப்பீர்கள்?அதில் எத்தனை உங்களை இதுவரை மிக அதிகமாக திகைப்பையும் பயத்தையும் சேர்ந்து தந்துள்ளது?இன்னும் ஒருபடி மேல் சென்று எத்தனைத் திரைப்படங்கள் உங்களை நிறைய சிந்திக்கவும் உங்களது உணர்வுகளை தூண்டவும் செய்திருக்கின்றன?

    இப்படி எதுவும் இதுவரை நடந்தது இல்லையன்றால் நீங்கள் உடனே இந்தப் படத்தைப் பாருங்கள்.எனக்கு கிடைத்த மேற்ச்சொன்ன அனுபவங்களை நீங்களும் பெற வாய்ப்புகள் உண்டு……!

 Film : The Exorcist

 Year : 1973

 Language : English (USA)    

 Director : William Friedkin [Oscar won Director Of French Connections (1971)]

 Awards : Won 2 Oscars Included Best Screenplay From 10 Oscar Nominations Included Best Picture and Director.

   

 தெ எஃசோர்சிஸ்ட் அல்லது பேயோட்டுபவர் என்கின்ற திரைப்படம் 1973 ஆம் ஆண்டு வில்லியம் ஃபிரிட்கின்  என்ற இயக்குனரின் கைவண்ணத்தில் ஹாலிவுட்டில் வெளிவந்த ஒரு ஹாரர் திரைப்படம் ஆகும்.உலகின் தலைச்சிறந்த ஹாரர் க்ளாசிக்குகளில் ஒன்றாக இன்றுவரை உலக சினிமா விமர்சனகர்த்தாக்களாலும் ரசிகர்களாலும் கருதபடுகின்ற தெ எஃசோர்சிஸ்ட்,அது வெளிவந்த ஆண்டில் மிக சிறந்தத் திரைப்படம் மற்றும் இயக்குனர் உட்பட 10 ஆஸ்கர் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டதோடு அதில் சிறந்தத் திரைக்கதை மற்றும் சொவுண்ட் எஃபெக்ட் – கான விருதுகளைத் தட்டிச்சென்றது குறிப்பிடதக்கது ஆகும்.    

 தெ எஃசோர்சிஸ்ட் பற்றிய சில தகவல்கள்:

 * ஒரே பெயரில் வெளியான நாவலை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படத்தின் திரைக்கதை எழுத்தாளறும் நாவல் ஆசிரியரும் – ஆன William Peter Blatty, தான் கல்லூரியில் படித்துகொண்டிருக்கும் பொழுது நாளிதளில் படித்த ஏறத்தாழ ஒரு உண்மைச் சம்பவத்தின் பாதிப்பிலேயே நாவலினை எழுதியதாக பின்பு ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.பின்பு அதன் தொடர்பில் நடந்த ஒரு ஆய்வில்,அவர் கூறிய ஏறக்குறைய அந்த ஆண்டில் அதே வீட்டில் யாரும் வசிக்கவில்லை என்று தெரியவந்தது பெரும் அதிர்ச்சியாகவே இருந்தது.  

 

* மேலும்,இந்தத் திரைப்படம் தயாரிப்பில் இருந்தபொழுது,இதில் பணியாற்றிய பணியாட்கள் உட்பட 9 பேர் இறந்தனர் மேலும் அதிர்ச்சியே.    

 * இந்த திரைப்படத்தின் இயக்குனர் பற்றி சொல்ல தேவையில்லை என்று  நினைக்கிறேன்.French Connections (1971) என்றத் திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட் திரில்லர் உலகினைக் கலக்கியதோடு சிறந்த இயக்குனர்க்கான ஆஸ்கர் விருதினையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 * சின்ன வயதாக இருந்தாலும் Linda Blair ரேகன் (Regan MacNeil) என்ற பேய்பிடித்த சின்னப் பெண்ணாக வந்து சும்மா நடிப்பில் பின்னியெடுத்திருப்பார்.தற்பொழுது AFI’s 100 Years…100 Heroes and Villains லிஸ்டில் சிறந்த வில்லன்/வில்லி வரிசையில் 9 – ஆவது இடத்திலும் இவர்  இடம்பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

 * அதோடு படத்தில் லிண்டா பிலேரின் தாயாராக வரும் Ellen Burstyn,தன்னுடை மகளை பழைய நிலைக்கு மீட்க போராடும் அம்மாவாக கிரிஸ் என்ற கதாபாத்திரத்தில் அசத்திருப்பார்.     

 * இந்தப் படத்தின் sequels – ஆக பார்ட் (Part) 2 மற்றும் 3 – ம் முறையே 1977 மற்றும் 1990 – ஆம் ஆண்டுகளில் வெளிவந்தன.படங்கள் சுமார் வகைதான் என்றாலும் ஹாரர் ரசிகர்கள் கண்டிப்பாகப் பார்க்கலாம் (நான் பார்த்துவிட்டேன்).

 

கொஞ்சம் ரிஸ்கி : இத்திரைப்படத்தில் சில இடங்களில் இடம்பெரும் சில (பல?) Jesus தொடர்பாக பேசப்படும் தகாத வசனங்கள் (வார்த்தைகள்) மற்றும் காட்சிகள் பலரை நோகச் செய்யலாம்.மிக முக்கியமாக கிறிஸ்த்துவ மதத்தைச் சார்ந்தவர்களை புண்படுத்தலாம். எனவே எதற்கும் Imdb இணையத்தளங்களில் ஒரு முறை சரி பார்த்துக்கொண்டு படத்தினை (The Exorcist) பார்க்கவும்.தவறாக எதேனும் சொல்லிருந்தால் மன்னிக்கவும்.

 மேலும் இந்த திரைப்படத்தினைப் பற்றி அறிவதற்க்கு கீழே உள்ள இணையத்தளங்களைப் பயன்படுத்தலாம் :

 http://www.imdb.com/title/tt0070047/  

 http://en.wikipedia.org/wiki/The_Exorcist_(film)

   கொஞ்சம் பழைய திரைப்படமாக இருந்தாலும் நடிகர்களின் அபாரமான நடிப்பிற்கும் கதை சொன்ன விதத்திற்க்காகவும் மற்றும் அருமையான இயக்கத்திற்காகவும் நிஜமாக ஹாரர் விரும்பிகள் மட்டுமன்றி அனைவரும் பார்க்க வேண்டிய படம் தெ எக்ஸ்சோர்ஸி.ஏனெனில் இது உலக சினிமாவின் ஒரு மிகச் சிறந்த ஹாரர் மட்டுமல்ல படமும் கூட.

                   (என்ன அழகு..இல்ல??)

பிழைகள் ஏதாவது கண்ணில் தென்பட்டால் மன்னிக்கவும்.திருத்திக்கொள்ள முயச்சி செய்கிறேன்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை உங்கள் ஆதரவிற்கு நன்றி.வணக்கம்.  

      

      ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் என்றக் காந்தப் பெயரைச் சற்று ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு முன்னமே அறிந்திருந்தாலும், தற்போதையக் காலமாக அவரது மீதும் அவரது திரைப்படங்களின் மீதுள்ள ஈர்ப்பும் ஆசைகளும் சற்று நிறையவே என்னுள் அதிகரித்துக் கொண்டு வருவதை அவ்வப்போது உணர்ந்துக்கொண்டே வருகிறேன்.உலகின் தலைச் சிறந்த படங்களாக கருதபடுகின்ற Psycho (1960),The Birds (1962),Shadow Of A Doubt(1943) போன்ற திரைப்படங்களைப் பார்த்ததன் வழி அவருடய திறமைகளையும் கதைச் சொல்லும் ஆளுமையையும் சற்று எளிதாக அறிந்துக் கொண்டதோடு பலச் சிறந்தத் திரைப்படங்களைத் தந்தவர் என்பதனை அதன் வழியே தெரிந்தும் கொண்டேன்.

      ஒரு சில மாதங்களுக்கு முன்புவரை, ஹிட்ச்காக் என்பவர் வெறுமனே திகில் மற்றும் மர்மம் நிறைந்தக் கதைகளைத் திரைபடங்களில் பதிவுச் செய்யும் இயக்குனர் என்றே எண்ணியிருந்தேன்.எதிர்பாராமல் சில மாதங்களுக்கு முன்பாக , அவரது Psycho திரைப்படத்தினைப் பார்த்தது முதல் அவரது திரைப்படங்களுக்கு நானும் அவரது ரசிகர்களில் ஒருவனாக ஆகினேன் என்றால் அது உண்மையே.எப்போழுதுமே எந்தவித எதிர்ப்பார்ப்பும் அல்லது எந்தவித முன் கற்பனைகளும் இல்லாமல்,ஒரு திரைப்படத்தினைப் பார்க்கும் பொழுது கிடைக்கின்ற மெல்லிய உணர்வுகளும் வலிமையான நினைவுகளும்,நாம் எதிர்ப்பார்த்து ஒரு திரைப்படத்தினை அணுகும்பொழுது இது பெரும்பாலும் கிட்டுவதில்லை. ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்கின் திரைக்காவியங்களுக்கு இந்த விஷயம் மிக இயல்பாகவே பொருந்திவிடுகிறது.எனவே, தொடர்ந்து அன்று முதல் நான் பெரும்பாலும் அவரது திரைப்படங்களை மேற்க்கூறிய வண்ணமே அணுகிவருகிறேன்.   

     ஹிட்ச்காக் என்று எளிதாக அனைவராலும் அறியப்பட்ட ஆல்ஃப்ரெட் ஜோசஃப் ஹிட்ச்காக் ஆகஸ்ட் மாதம் 13 திகதி 1899 ஆம் ஆண்டு Leytonstone London, Englandஇல் பிறந்த அவர் சுமார் 60 ஆண்டுகளில் The 39 Steps (1935), The Lady Vanishes (1938) போன்ற பிரிட்டிஷ் திரைப்படங்களையும் Shadow Of A Doubt, Spellbound (1945), Rear Window, Vertigo (1958), Psycho (1960), The Birds (1963) போன்ற 50 – க்கும் மேற்ப்பட்ட் மிகச் சிறந்த திகில் மற்றும் மர்மம் சார்ந்தச் சினிமா வகையிலான ஹாலிவுட் திரைப்படங்களையும் இயக்கிய பெருமை ஹிட்ச்காக்கையேச் சேரும்.

    

ஹிட்ச்காக்கும் சுவாரஸ்ய தகவல்களும்:

      ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்கைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றையையும் அவரது திரைப்படங்களைப் பற்றின மேலும் பல விபரங்களை அறிய கீழே உள்ள இணையத்தளங்க்களைத் தயவுச் செய்து நாடவும்…

To More Info:

http://en.wikipedia.org/wiki/Alfred_Hitchcock

http://www.imdb.com/name/nm0000033/

http://hitchcock.tv/

 http://www.sensesofcinema.com/2005/great-directors/hitchcock/

And More Will Coming Soon…

     மற்றும் சர் ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்கின் பல அற்ப்புதமானத் திரைப்படங்களை இலவசமாக பதிவிரக்கம் செய்ய கீழே உள்ள லிங்க்கை பயன்படுத்தவும்..

http://worldoffreemovies-kumaran.blogspot.com/2011/06/director-sir-alfred-hitchcock-18991980.html

 (Under Construction)

Many Will Coming Soon….

 

    

     The Reviews For Many Of Alfred Hitchcock’s Movies Shortly Will Coming Soon..Untill Than..Keep Browsing And Watching  The legendary’s Films.Thanks For Your Supports…All The Best.     

    இனி வரும் போஸ்ட்களில் ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்கின் பல திரைப்படங்களைப் பற்றிய சிறு சிறு விமர்சனங்களும் மற்றும் சுவையான தகவல்களும் இடம்பெரும்..தொடர்ந்து இணைந்திருங்கள்….நன்றி.

 குறிப்பு

நான் இதுப்போன்ற ப்ளாக்கிற்கு நான் மிகவும் புதிது,எனவே பிழைகள் ஏதாவது தென்பட்டால் தயவுச் செய்து மன்னிக்கவும்.சரிச்செய்ய முயற்சிச் செய்கிறேன்.நன்றி

Sila Nerangalil Sila Manithargal (1975)

Posted: ஜூன் 23, 2011 in Best movies I have seen
குறிச்சொற்கள்:

One of the new trend setter of Indian cinema at 70’s.

undoubtedly one of the best film of Tamil cinema ever made.even in Indian cinema too and certainly one of the only few new trend setting movies of 70’s.visually most beautiful film and the way of storytelling was truly extraordinary.

The film tell us the story of a young unmarried woman,who tries to living in alone after she was raped by a stranger at a rainy day.the story continues as she facing some social problem around her life after that tragedy.

i really liked the performances of leading characters,especially actress Lakshmi as ganga who won Indian National Film Award for best actress for that year was truly amazing and great. One of the finest achievements of Bhim Shing as the director of the film.

Watch the movie,at least for once..it will be a new experience to you as a movie fan.